Thipaan / 2016 ஜூன் 09 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பூவரசந்தீவு பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் ஆற்று மணல்; அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் ஐவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், அவர்கள் மணல் அகழ்வுக்குப் பயன்படுத்திய உழவு இயந்திரங்கள் நான்கையும் கைப்பற்றியுள்ளனர்.
கிண்ணியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நேற்றுப் புதன்கிழமை குறித்த பிரதேசத்துக்கு விரைந்த பொலிஸ் குழுவே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர்களையும் உழவு இயந்திரங்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 minute ago
24 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
41 minute ago