Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 மே 06 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
புல்மோட்டை தொடக்கம் கொக்கிலாய் பிரதேசத்தில் சுமார் 2,500-3,000 மீனவர்கள் கூட்டு வலை மூலம் பாரம்பரிய மீன்பிடி முறையை கையாண்டு மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், கூட்டுவலை தடை செய்யப்பட்ட வலையாக அறிவிக்கப்பட்டதால், இப்பிரதேசத்தில் இம்முறை மூலம் மீன்பிடிக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. இத்தடையினால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுகொடுக்கும் நோக்கில், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் ஏற்பாட்டில், கடல்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மீனவர்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் புதன்கிழமை(04) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அமைச்சரிடம் மீனவர் சங்க பிரதிநிதிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனை கருத்தில் கொண்ட அமைச்சர், அப்பகுதியில் தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி அளித்து இவ்வனுமதியை உடனே அமுல்படுத்தும் படி கடற்தொழில் திணைக்கள பணிப்பாளருக்கும் அறிவித்தார்.
அத்துடன், அப்பகுதிகளில் உரிய ஆய்வுகளை முன்னெடுத்த பின்னர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பின்றி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்டுவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .