Princiya Dixci / 2022 மார்ச் 31 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத தனது இயலாமையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது போனதாக, கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றும் போது, ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.
“அதேவேளை, இம்மாநாட்டில் உரையாற்றிய பங்களாதேஷ் பிரதமர் பேகம் ஷேக் ஹஸீனா, கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் தமது நாடு 6.3 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“இலங்கையும் பங்களாதேஷும் தெற்காசிய நாடுகள். இரண்டுக்கும் கொரோனா பொதுப் பிரச்சினை. இருந்தும் அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. நமது பொருளாதாரம் அதாளபாதாளத்தை அடைந்துள்ளது.
“போலி விளம்பரங்கள் மூலம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். எனினும், அவரால் கொரோனா சவாலை வெற்றி கொள்ள முடியவில்லை.
“ஆடத் தெரியாதவன் மேடையைக் குறை சொல்வது போல, பொருளாதாரம் தெரியாத ஜனாதிபதி, அதற்கு கொரோனாவைக் காரணம் காட்டுகின்றார். இதனால் அவர் தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாது, நாட்டு மக்களையும் பொருளாதாரத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025