2025 மே 21, புதன்கிழமை

இரண்டு பள்ளிவாயல்களில் திருட்டு

Princiya Dixci   / 2016 ஜூன் 07 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்திலுள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிவாயல்களில், நீர் இறைக்கும் மோட்டர்கள் இரண்டு மற்றும் இரும்புகள் என்பன திருடப்பட்டுள்ளதாக, கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். 

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பிரதேசத்தில் அமைந்துள்ள தௌபீக் பள்ளிவாயலிலும் ஆயீஷா பள்ளிவாயலிலுமே திங்கட்கிழமை (06) இரவு திருட்டுச் சம்பவம் பெற்றுள்ளதாக, முறைப்பாடு கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இப்பள்ளிவாயல்களில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு மோட்டார் இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அப்பள்ளிகளின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X