ஒலுமுதீன் கியாஸ் / 2019 மார்ச் 26 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
35 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப்பப்பை, கழுத்து, மார்பகப் புற்றுநோய்களுக்கான இலவச பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேற்படி நோய்கள் முன்கூட்டியே கண்டறியக்கூடியவை எனவும் இவற்றுக்காக தமது பிரதேச அலுவலகத்தில், பிரதி சனிக்கிழமை தோறும் இலவச பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, 35 வயதைக் கடந்த பெண்கள், புற்றுநோய் பரிசோதனைக்காக பிரதேச சுகாதாரப் பணிமனைக்கு வருமாறும், அவர் அழைப்பு விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .