Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறிய மக்களின் நலனுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம், திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் (16) காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது.
இந்த இலவச மருத்துவ முகாம், RUN to Beat Cancer in Sri lanka organization UK, CANE அமைப்பின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இதில் புற்றுநோய்க்கான பரிசோதனை, கண் பரிசோதனை, பற்சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை, குருதி அழுத்தப் பரிசோதனை, நீரிழிவுப் பரிசோதனை, பொதுவான சிகிச்சைகள் போன்ற பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, மருத்துவத் தேவைகளை எதிர்நோக்கியுள்ள மக்கள், இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
9 minute ago
10 minute ago