2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 18 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

அநுராதபுரம், விகார ஹல்மில்லகுளம், பியந்த மாவத்தையைச் சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத் பிரசாத் குமார (24 வயது) எனும் இளைஞன், திருகோணமலை, முதலியார்குளம் குளத்துக்கு அருகில் இன்று (18) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வரும் இவர், குடும்பத்தகராறு காரணமாக அவர் கடமையாற்றிக் கொண்டிருந்த இடத்துக்கு முன்னாலுள்ள குளத்துக்கு அருகில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. 

சம்பவ இடத்துக்கு, திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி வருகை தந்து, மரத்தில் தொங்கிய நிலையிலிருந்த சடலத்தை பார்வையிட்டதாகவும் மரணத்தில் எதுவித சந்தேகமும் இல்லை என உறவினர்கள், போலிஸாரிடம் கூறியதை அடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X