Princiya Dixci / 2016 மார்ச் 13 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலை, வரோதய நகரில் அமைந்துள்ள அம்மன் கோவில் மலைப்பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம், இன்று ஞாயிற்றுக்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
வரோதயநகரைச் சேர்ந்த முருகதாஸ் ஹரிதாஸ் (வயது 19) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (11) காலை, பனை மட்டை வெட்டி வரப்போவதாக தன்னிடம் கூறி விட்டுச் சென்றவர் வீடு திரும்பாததையடுத்து, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததாக இளைஞனின் தந்தை தெரிவித்தார்.
காணாமல்போனவரை வெள்ளிக்கிழமையிலிருந்து தேடி வந்த நிலையில் இன்று (13) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக உப்புவெளிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago