Princiya Dixci / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதியை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே, செவ்வாய்க்கிழமை (02)உத்தரவிட்டார்.
வான்எல, ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த லிஸ்நுரான் முதியான்சாலாகே அனுரபண்டார (வயது 47) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் செல்லும் வழியிலேயே குறித்த நபரை, திருகோணமலை, அபேயபுர சந்தியில் வைத்து கடந்த திங்கட்கிழமை (01) மாலை திருகோணமலை போக்குவரத்துப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
குறித்த சந்தேநபரை, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கெதிராக மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு வழக்குகள் ஏற்கெனவே நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
20 minute ago
28 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
28 minute ago
47 minute ago