2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இ.போ.ச பஸ்ஸும் இராணுவ பஸ்ஸும் மோதியதில் அறுவர் காயம்

Thipaan   / 2016 நவம்பர் 12 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் இலங்கை போக்குவரத்துக்குச் சபையின் கந்தளாய் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸும் இராணுவத்துக்குச் சொந்தமான பஸ்ஸும் 91ஆம் கட்டை பலுகஸ்வௌ பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஆறு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (12) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், கந்தளாய் அல்லை இராணுவ முகாமில் கடமையாற்றும் எஸ்.ஏ.ஆர்.சஞ்ஜய (35 வயது) என்ற இராணுவ வீரரும் எல்பிடிய கனேகொட பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எஸ்.பேமதாஸ (57 வயது), கந்தளாய் பகுதியைச் சேர்ந்த எல்.டி.கருணாவதி (56 வயது), ஜீ.எச்.தமயந்தி (35 வயது), டபிள்யூ.எஸ்.சேனானி (32 வயது), எச்.எம்.நந்தாவதி (50 வயது) ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தளாய் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .