Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அலுவகத்துக்கு முன்பாக சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவரில் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய திகதியை உடனடியாக அறிவிக்குமாறு கோரி கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த திங்கட்கிழமை (25) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், இரு தொண்டர் ஆசிரியர்கள் புதன்கிழமை பிற்பகலிலிருந்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் ஒருவரே மயக்கமடைந்துள்ளார்.
9 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago