Suganthini Ratnam / 2016 மார்ச் 01 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை ஏற்கெனவே பராமரித்துவந்த உப்புவெளி பிரதேச சபையிடம் மீளவும் கையளிக்க வேண்டுமென்று விடுத்த கோரிக்கைக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார இணக்கம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்றபோது, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை மீளவும் உப்புவெளி பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன்; பிரேரணையை முன்வைத்து கோரிக்கை விடுத்தார்.
2017ஆம் ஆண்டு முதல் உப்புவெளி பிரதேச சபையிடம் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கான பராமரிப்பையும் வருமானத்தையும் வழங்கவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தன் தெரிவிக்கையில், 'பல வருடங்களாக கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை பராமரித்து வருமானம் பெற்றுவந்த உப்புவெளி பிரதேச சபையிடமிருந்து இந்த உரிமையை தொல்பொருள் திணைக்களம் தன்வசம் பெற்றுக்கொண்டது. தற்போதைய நல்லாட்சியில் இதனை மீளவும் உப்புவெளி பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டுமென கோரியமைக்கு அரசாங்க அதிபர் இணங்கியுள்ளார்' என்றார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026