Freelancer / 2023 மே 29 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், மாகாண பிரதம செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் சித்திக் மற்றும் அவருடைய அதிகாரிகளுக்குமிடையே கலந்துரையாடல் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மூன்று வேளை உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது குறித்தும், இலங்கையிலேயே கிழக்கு மாகாணத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால், அவர்களுக்காக புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்போது உலக உணவு திட்டத்தின் நிர்வாகிகள் தாங்களால் முடிந்த முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.
இதில் ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (N)
11 minute ago
17 minute ago
33 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
33 minute ago
43 minute ago