2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன் 

திருகோணமலை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மூதூர் பிரதேச மக்களுக்கு, திருகோணமலை திருக்கோணேஸ்வர கோவில் பரிபாலன சபையினரால், உலருணவுப் பொதிகள், நேற்று(4) வழங்கப்பட்டன.

மூதூர் பிரதேசத்தில் உள்ள கங்குவேலியில் 20 குடும்பங்கள், புளியடிச்சேலையில் 30 குடும்பங்கள்,  ஆதியம்மன் கேணியில் 54 குடும்பங்கள், லிங்கபுரத்தில் 66 குடும்பங்கள், தம்பலகாமம் பாலம் போட்டாறில் 28 குடும்பங்களுக்கு, உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக திருகோணமலைப் பகுதியில் 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன என கோவில் பரிபாலன சபையின் தலைவர் க. அருள்சுப்பிரமணியம் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .