Editorial / 2018 நவம்பர் 01 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் சம்பந்தமாக, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு, திருகோணமலை சன்சைன் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை இடம்பெறவுள்ளதென, இத்திட்டத்தை அமுல்படுத்தும் வாழ்க்கை தொழில் பயிற்சி நிறுவனத்தின் திட்ட அதிகாரி எஸ்.சதீஸ் குமார் தெரிவித்தார்.
இத்திட்டம், அவுஸ்திரேலிய அரச நிதியுதவியுடனும், இலங்கை திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சின் பங்களிப்புடனும் அமுலாகின்றது.
பெண்களின் திறன்களை மேம்படுத்தி வளர்ச்சியடையச் செய்தல் , தொழில் முயற்சியாண்மைக்கு சுற்றுலாத் துறை ஊடான விருத்தி, வருமானத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பல திட்டங்களை உள்ளடக்கிய விரிவுரைகள் இதில் இடம்பெறவுள்ளன.
17 minute ago
20 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
23 minute ago