2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஊருக்குள் புகுந்துள்ள யானைகளால் மக்கள் அவதி

Thipaan   / 2016 நவம்பர் 06 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஜின்னா நகர், முன்னம்பொடி வெட்டை குடியிருப்பு பகுதிக்குள், சனிக்கிழமை (05) இரவு புகுந்த மூன்று காட்டு யானைகளால், தாம் பெரும் பீதியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஊருக்குள் புகுந்த யானைகள், இதுவரை பயன்தரக்கூடிய 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் வாழை மரங்களையும் அடித்து துவம்சம் செய்துள்ளதோடு, பாரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

அதேவேளை, இற்றைவரை யானைகள் ஊருக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளதாகவும் பீதியினால் குடியிருப்பிலுள்ள மக்கள் இடம் பெயர்ந்து தொலைவில் உள்ள வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் சிறுவர்கள், பெண்கள் அச்சத்தில் இருந்து வருவதாகவும் அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த பல நாட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறிப்பிட்டும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென, அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை ஊருக்குள் புகுந்துள்ள யானைகளை அப்புறப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் அப்பிரதேச, இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .