Editorial / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
திருகோணமலை, தோப்பூர் பிரதேச விவசாயிகள் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே ஓர் ஏக்கருக்கு அறுவடை இயந்திரக் கூலி 6,500 ரூபாய் தொடக்கம் 7,000 ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது எரிபொருளுக்கான விலை அதிகரித்தமையால் அறுவடை இயந்திரக் கூலி ஏக்கருக்கு 9,000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் ஏக்கருக்கு சுமார் 30 மூடைகள் அருவடை கிடைத்ததாகவும் இம்முறை யூரியா பசளை இல்லாமையால் விளைச்சல் குறைவடைந்து ஏக்கருக்கு 5 தொடக்கம் 10 மூடைகள் கிடைத்து வருவதால் தாம் பாதிப்புற்றுள்ள நிலையில், எரிபொருள் விலை ஏற்றத்தால் மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தோப்பூர் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
11 minute ago
27 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
38 minute ago
3 hours ago