Princiya Dixci / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற எழுத்தாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும், பிரதேச சாகித்திய விழாவும், நாளை மறுதினம் 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 09 மணியளவில் மூதூர் - சேனையூர் அநாமிகா பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளன.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு முதன்மை அழைப்பாளராக ஓய்வுபெற்ற அதிபர் இரா.இரத்தினசிங்கம் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வுக்கு கிண்ணியா, மூதூர், வெருகல் மற்றும் சேருநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டு, அவர்களுக்குள் ஓர் அறிமுகத்தையும், அவர்களுக்குள் இருக்கின்ற கலை, கலாசார செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடனேயே இந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக, மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்வாறான நிகழ்வுகளை மாவட்ட ரீதியாகவும், பிரதேச செயலகங்கள் ரீதியாகவும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
44 minute ago
49 minute ago