Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
ஐக்கிய தேசிய கட்சியில் மறுசீரமைப்பு அவசியம் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம். இம்ரான் தெரிவித்தார்.
நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தத் தேர்தலில் மட்டுமல்லாது, இதற்கு முன் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்கள் பலவற்றிலும் சிறுபான்மை மக்கள், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, சரத்பொன்சேகா, மைத்ரிபால சிறிசேன போன்ற வேட்பாளர்களுக்கே வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
ஆகவே, இந்தத் தேர்தலில் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததை, இனவாதம் கொண்டு நோக்கக் கூடாது என்றும் அவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல், சிங்கள பௌத்தரான சஜித் பிரமதாசவுக்கே வாகளித்துள்ளர்கள் என்பதை உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவானது, சிறுபான்மையினருக்கு, குறிப்பாக சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கு சிறந்த செய்தி ஒன்றை கூறியுள்ளது என்றும் பெரும்பான்மை மக்களிடத்தில் எவ்வாறு இனவாத பிரசாரங்கள் கலையப்பட வேண்டும் என நாம் எதிர்பார்கின்றோமோ அதே போல் எமது மத்தியிலும் அது நிகழ வேண்டும் என்றும் இதை அடிப்படையாக கொண்டு சிறுபான்மை கட்சிகள் தமது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என நம்புவாகவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago