Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்பட வேண்டுமென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
இதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையகக் கட்சி என்பன உறுதுணையாக உள்ளதாகவும் தங்களுக்குள் எவ்விதப் பிரிவினையும் கிடையாதெனவும் அவர் தெரிவித்தார்.
மூதூரில் நேற்று (24) காபட் வீதி ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றை சிறுபான்மை வாக்குகள் மூலமே அரசாங்கத்துக்குச் சரியான முடிவுகளை வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
முப்பது வருட கால யுத்தம் காரணமாக, திருகோணமலை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகவும் பல்வேறு அபிவிருத்திகள் இங்கு செய்ய வேண்டியுள்ளதாகவும் அதற்கமைய துரித அபிவிருத்தியில் ஐந்து மாவட்டங்களில் திருகோணமலையும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இனவாதங்களைக் கக்கி, வாக்குகளைத் தேட முயற்சிப்பது தோல்வியில் முடிவடையுமெனவும் மஹிந்த அரசாங்கம் யுத்தத்தை வெற்றி கொண்ட போதும் இறுதியாக நடைந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமை இந்த நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இனவாதத்தை விதைத்ததால்தான் இதற்கான தகுந்த பாடத்தை மக்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மொட்டு, கதிரை என்ற கட்சி பாகுபாடின்றி, உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக செயற்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்த அவர், முஸ்லிம் சமூகம் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் இதனை வெற்றிகொள்ள வருகின்ற தேர்தல் நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைய நாம் அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை என்றார்.
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago