Editorial / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்
திருகோணமலையில், ஹெரோய்ன், கேரளக் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன், மூவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பகுதியில் 90 மில்லிக்கிராம் ஹெரோய்னும் 1,580 மில்லிக்கிராம் கேரள கஞ்சாவும் வைத்திருந்த குற்றச்சாட்டில், இன்று (04) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, காக்காமுனை, பாடசாலை வீதியைச் சேர்ந்த 49 வயது நபரொருவரே, பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபரை, மேலதிக விசாரணைக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜெனோசன் தெரிவித்தார்.
இதேவேளை, கந்தளாயில் 3034 மில்லிகிராம் ஹேரொய்ன் போதைப்பொருளை வைத்திருந்த மூவரை, இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.
கந்தளாய், வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 33, 31, 25 வயதுகளையுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago