Princiya Dixci / 2021 ஜனவரி 28 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட புல்மோட்டை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம், இன்று (28) அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த நால்வருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது 03 பெண்கள் உட்பட ஆணொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் மொத்தமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்ந்துக் கொள்ளுமாறும், முகக் கவசங்களை பாவிக்குமாறும் சுகாதார திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் தொடர்ந்தும் பின்பற்றுமாறும் திருகோணமலை சுகாதார சேவைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
12 minute ago
22 minute ago
23 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
23 minute ago
27 minute ago