2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஒரு போத்தல் சாராயம் வைத்திருந்தவருக்கு 03 மாதங்கள் சிறை

Princiya Dixci   / 2016 மார்ச் 15 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை, கிண்ணியாப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி ஒரு போத்தல் வடிசாராயத்தினை வைத்திருந்த நபரொருவருக்கு மூன்று மாத கட்டாய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே, இன்று செவ்வாய்கிழமை (15) உத்தரவிட்டார். 

கிண்ணியா பைசல்நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கெதிராக இரண்டு சாராய வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர், இவ்வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் பல வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காத நிலையிலே நேற்று திங்கட்கிழமை (14) கிண்ணியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (15) ஆஜர்படுத்தப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .