தீஷான் அஹமட் / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாட்டாளி புரம் காட்டுப் பகுதியில் இயங்கி வந்த கசிப்பு நிலையத்தை, நேற்று முற்றுகையிட்ட சம்பூர் பொலிஸார் 24 வயது இளைஞனைக் கைதுசெய்தனர். இதன்போது, 1 இலட்சத்தி 50 ஆயிரத்தி 750 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று மறைமுகமாக இயங்குவதாக சம்பூர் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், சம்பூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
48 minute ago
1 hours ago