Princiya Dixci / 2016 மார்ச் 21 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, சேருவிலப் பிரதேசத்தில் கேரளா கஞ்சா 250 கிராம் வைத்திருந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.
கேரளா கஞ்சாவை நண்பர் ஒருவரிடம் கொடுப்பதற்கு கொண்டு சென்ற நிலையிலேயே பொலிஸார், சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபருக்கு கஞ்சா வைத்திருந்த வழக்கொன்றும் மூதூர் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை, பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago