2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இருவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த  இருவருக்கு தலா 7ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

குறித்த இருவரையும்; திருகோணமலை தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் கைதுசெய்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (04) ஆஜர்படுத்தினர். இதன்போதே, நீதவான் சரவணராஜா இவ்வாறு தண்டம் விதித்தார். 

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் சீனக்குடாப் பகுதியில் நடமாடிய இவ்விருவரையும் சோதனைக்குட்படுத்திய போது, அவர்களிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X