2025 ஜூலை 28, திங்கட்கிழமை

கடற்படையினரை வெளியேற்றவும்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்   

திருகோணமலை - குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரடிமலைப் பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேறுமாறு அப்பகுதி  மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குச்சவெளி, கரடிமலைப்பகுதியில் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸார் நிலை கொண்டிருந்தனர்.

அப்போதைய காலப்பகுதியில் நடந்த யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் ஏற்பட்ட போரில் கரடிமலை முகாம் தாக்கி அழிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடற்படையினர் கரடிமலைப் பகுதியில் நிலை கொண்டிருந்தனர். தற்காலத்தில் படிப்படியாக, பொதுமக்கள் மீளக்குடியேறி வரும் நிலையிலும் அந்த முகாம் கடற்படையினர் வசமே உள்ளது.

இதனால், அங்குள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளைச் செய்ய பாரிய சிரமங்களை எதிர் கொள்வதாக மக்கள் முறையிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .