Princiya Dixci / 2021 மார்ச் 09 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல், முகத்துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்குண்டு மீனவரொருவர், இன்று (09) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர், கட்டைபறிச்சான்-சாலையூர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தை வடிவேல் ரவீந்திரன் (53 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கரைவலையை இழுத்துக் கொண்டிருந்தபோது இவர் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன, சம்பவ இடத்துக்கு வருகைதந்து சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், இம்மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என உறவினர்களால் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரியப்படுத்தியதையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
14 minute ago
17 minute ago
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
28 minute ago
32 minute ago