Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட வீரச்சோலை கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிக் காணாமல் போன ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி, இரணகேணிப் பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் சுபாகரன் (16 வயது ) என்பவரது சடலமே மீட்கப்பட்டது.
மேற்படி கடலில் நேற்று வியாழக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோதே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் கிராம மக்களும் இணைந்து குறித்த சிறுவனை தேடியபோதே, இச்சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
11 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
30 minute ago