Princiya Dixci / 2016 மார்ச் 01 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, நகர சபைக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற அருட்தந்தை, நீரில் மூழ்கி நேற்று திங்கட்கிழமை (29) இரவு உயிரிழந்துள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், லியோ மார்ங்கா ஆச்சிரமத்தின் இயக்குனரான பண்டாரவளை - இல. 121/01 புனித தோமையார் வீதியைச் சேர்ந்த அருட்தந்தை சந்தியாப் பிள்ளை கீத பொன்கலன் (69 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், திருகோணமலை பொதுவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அருட்தந்தையின் சடலம், திருகோணமலை ஆயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை (01) வைக்கப்பட்டு, நாளை (02) புதன்கிழமை பண்டாரவளைக்கு கொண்டு செல்ல உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பாக துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026