2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கடையில் கொள்ளை; இளைஞன் கைது

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, 4ஆம் கட்டைப் பகுதியில் கடையொன்றை உடைத்து, அங்கிருந்த 8,800 ரூபாய் பணத்தையும் மா வகைகள், டின் மீன்கள் உள்ளிட்ட பொருட்களையும் திருடி விற்பனை செய்ய முயன்ற இளைஞனை, நேற்று (17) மாலை கைது செய்துள்ளதாக, சீனக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

சுமேதங்கரபுர, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டார் எனவும், அவர், ஹெரோய்ன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரொய்ன் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை போன்ற வழக்குகள், சந்தேகநபருக்கெதிராக நடைபெற்று வருவதாகவும், சீனக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X