2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கந்தளாயில் மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்   

திருகோணமலை கந்தளாயில்   மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தளாயில்  இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நடைபெற்றது.கந்தளாய் மணல் அகழ்வு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.இவ்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்:

கந்தளாய் கங்கைப் பகுதியில் தும்மோதர நிறுவனம் ஒன்று மணல் ஏற்றுவதால் திருகோ ணமலை மாவட்டத்திலுள்ள  இருபதாயிரம் மற்றும் முப்பதாயிரம் குடும்பங்களின்  ஜீவனோபாயம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.   இந் தனியார் நிறுவனம் கந்தளாவை விட்டு வெளியேர வேண்டும்  எங்களது தொழிலை நிம்மதியாக செய்வதற்கு வழிவிட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .