எப். முபாரக் / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020ஆம் ஆண்டுக்கான கந்தளாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட அறிக்கை, 21 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபைத் தலைவர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று (23) நடைபெற்ற போது, மேற்படி அறிக்கை சபைக்குச் சமர்பிக்கப்பிட்டது.
கந்தளாய் பிரதேச சபையின் 24 மொத்த உறுப்பினர்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும் பிரதித் தவிசாளரும் இதன்போது சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
இந்த வரவு – செலவுத்திட்ட அறிக்கைக்கு, ஆதரவாக 21 வாக்குகள் அளிக்கப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, அடுத்த வருடத்துக்குப் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுக்குத் திட்டமிட்டுள்ளதாக, சபையின் தலைவர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago