Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் பதவிசிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 9 வயதுச் சிறுவன், கயிற்றில் சிக்கி, கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவமொன்று, நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
பதவிசிறிபுர ஜயந்திவெவ என்ற இடத்தைச் சேர்நத 4ஆம் ஆண்டு கல்வி பயிலும் டபிள்யூ.ஏ.தேவிந்த மதுஷான் வீரதுங்க எனும் மாணவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வீட்டுக்கு முன்னால் சிறிய கூலான் மரம் இருப்பதாகவும் முகத்தை மூடிக்கொண்டு விளையாட்டாக அம்மரத்தில் ஏறியதாகவும் மரத்தில் காணப்பட்ட னைலோன் கயிறு கழுத்தில் சிக்கி இறுகியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு கெப்பித்திகொள்ளாவ நீதிமன்ற நீதவான் வருகை தந்து பார்வையிட்டதுடன், சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் கட்டளையிட்டார்.
இது தொடர்வில் பதவிசிறிபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
22 minute ago
28 minute ago
42 minute ago