2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கல்வி அலுவலகம் இடமாற்றம்

எப். முபாரக்   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - மூதூர் பிரதான வீதியிலுள்ள அந்தோனியார் மகா வித்தியாலயத்தில், பல்வேறு இட நெருக்கடிக்கு மத்தியில் இயங்கி வந்த மூதூர் கோட்டக் கல்வி அலுவலகம், பிறிதொரு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இப்பாடசாலையின் வகுப்பறைகள் இரண்டில் இவ்வலுவலகம் இயங்கிய நிலையில், பாடசாலை மாணவர்களுக்கான நூல்களை விநியோகிப்பதிலும் களஞ்சியப்படுத்துவதிலும் பல வருட காலமாக பல்வேறு இடையீறுகள் ஏற்பட்டதுடன், அலுவலக ரீதியான பணிகளுக்கும் இவ்விடம் பெரும் நெருக்கடியாகக் காணப்பட்டது.

இதனையடுத்து, தற்போது மூதூர் - மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியிலுள்ள வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு அருகாமையிலுள்ள புதிய கட்டடத்துக்கு இவ்வலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .