Princiya Dixci / 2021 மார்ச் 01 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாணத்தில் காடழிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், மாகாணம் முழுவதும் உள்ள அரசு இருப்புக்களில், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் விளம்பரப் பலகைகள் நிறுவப்படவுள்ளன.
இதன்படி, முதல் அறிவிப்பு விளம்பரப் பலகை, கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத்தால் குச்சவெளிப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் காடழிப்பை இதன்மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விளம்பரப் பலகையில், “அரசுக்கு ஒதுக்கப்பட்டது, உட்செல்லத் தடை”, “பாரம்பரிய எச்சங்களை நாசம்செய்வது தண்டனைக்குரிய குற்றம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், காடழிப்புத் தொடர்பில் 0707011117 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
16 minute ago
19 minute ago
30 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
30 minute ago
34 minute ago