Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - ஹொரவபொத்தான பிரதான வீதி பன்மதவாச்சி காட்டுப்பகுதிக்குள் ஆணொருவரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர், பன்குளம் - பன்மதவாச்சி பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிறிதர் (57வயது) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பன்மதவாச்சி வயலை அண்மித்த காட்டு பகுதியில் பேர் மாடுகளை மேய்ப்பதற்காக இருவர் சென்றிருந்த வேளை, அவ்விடத்தில் நபரொருவர் வீழ்ந்து கிடப்பதை அவதானித்த நிலையில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகத் தெரிவித்தனர்.
அகுறித்த இடத்துக்கு விரைந்தப் பொலிஸ் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. எஸ். எம். றூமி ஸ்தலத்துக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நாளை (21) சட்ட வைத்திய நிபுணர் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்த மொரவெவ பொலிஸார்குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago