Editorial / 2024 ஜூன் 29 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கீதபொன்கலன்
இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், இவ்விடயம் குறித்து இன்று ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், 10 மணி நேரத்திற்குள் அப்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை,சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணி ஈடுபட ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, மர்மமான முறையில் காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் இன்று மீட்டு எடுத்துள்ளனர். .
குறித்த சுற்றுலா பயணி மருத்துவ பரிசோதனையின் பின், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.




58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago