Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்
திருகோணமலை, கப்பற்றுறை, மிகுந்தபுரம், 4ஆவது மைல்கல் பிரதேசங்களிலுள்ள காணிகளில் குடியிருப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தி, இன்று (28) போராட்டம் நடத்தப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
பின்னர் பிரதான வீதியினூடாக கடற்கரை வீதியால் வருகை தந்த இப்போராட்டத்தில் ஈடுபட்டோர், உட்துறைமுக வழியாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்குச் சென்று அங்கும் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தனவைச் சந்தித்து, தேசிய மீனவர் இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவர் உட்பட சிலர் மகஜர் கையளித்தனர்.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago