2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காணி அபகரிப்புக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் வீதி மறியல் போராட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா வலய கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் மீரா நகர் பாடசாலையின் காணி அபகரிப்புக்கு எதிராக, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து, தங்களது பாடசாலைக்கான காணி வேண்டுமென, பாடசாலை நேரத்தில், வீதிக்கு முன்னால் இன்று (05) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்த விளையாட்டு மைதானம் இன்மை போன்றவற்றை எடுத்துக் கூறியும், கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் காணி கோரி நின்றனர்.

சம்பவ இடத்துக்கு, தம்பலகாமம் பொலிஸாரின் உதவியுடன், தம்பலகாமம் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எம். சுபியான், கிண்ணியா வலய கல்வி அதிகாரி ஆகியோர் உடன் விரைந்தனர்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு தவிசாளரால் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி வரவழைக்கப்பட்டு, பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை முன்வைத்தமையால், கவனயீர்ப்பில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் அவ்விடத்தை விட்டுக் கலைந்து சென்றதுடன், குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X