Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில், இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டாதவர்களுக்கு, இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு, ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ், சம்பந்தப்பட்ட அதிகதரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில், இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்படாத நிலையிலும், சிறிய காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும், நீண்ட நாள்களாக அந்த காணிகளில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதை கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் செயலகத்தில் காணி அமைச்சினுடைய செயலாளர்,மாகாண காணி ஆணையாளர்,அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தின்போதே, மேற்படி விடயம் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற 15 ஆயிரம் வழங்கப்படாத காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் முடிவடைந்தும் காரியாலங்களில் தேங்கிக் கிடக்கும் பத்திரங்கள் ஆகியவை அனைத்தும் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அதன் வேலைகளை பூர்த்தியாக்கும்படியும் 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மூன்று மாவட்டத்துக்கும் காணிகளைப் பிரித்து கையளிக்குமாறும், கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் உத்தரவு பிறப்பித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago