Freelancer / 2022 நவம்பர் 30 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் காரைதீவு - 12
மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் விசேட டெங்கு கள பரிசோதனை செவ்வாய்க்கிழமை (29)
நடைபெற்றது.
469 வீடுகளில் பரிசோதனை செய்யப்பட்டதுடன், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை
வைத்திருந்த 16 வீடுகளுக்கு சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொது
சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள்,
காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் டெங்கு தடுப்பு பரிசோதனையில்
கலந்து கொண்டனர். R
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago