2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கார் விபத்தில் ஒருவர் படுகாயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்

மூதூரிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த காரொன்று, உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தாரென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம், திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில், கிண்ணியா பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகில், இன்று (05) காலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த இராசவேலு (வயது 47) என்பவரே இந்த விபத்தில் காயமடைந்து, கிண்ணியா தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

கார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். எனினும், காரின் சாரதிக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கார் உரிமையாளருக்கு நெஞ்சில் அடிபட்டுள்ளதெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரனைகளை, கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X