Editorial / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை பொது வைத்தியசாலைக் காவலாளிகள் இருவர் மீது, அங்கு கடமையாற்றும் சிற்றூழியர்கள் மூவர், நேற்று (29) இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயங்களுக்குள்ளான 26, 52 வயதுக் காவலாளிகள் இருவரும், அதே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிற்றூழியர்கள் மூவரும், வைத்தியசாலை வளாகத்துக்குள் மது அருந்திக் கொண்டிருந்த போது, அதனைத் தடுக்க காவலாளிகள் முயன்ற வேளையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவ் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago