Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 10 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், அப்துல்சலாம் யாசீம்
கொரோனா தொற்றாளர்களின் சிகிச்சை நிலையங்களை கிண்ணியாவில் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனி தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இம்மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் ஈச்சிலம்பற்று போன்ற பிரதேசங்களில் கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு இடப்பற்றாக்குறை நிலவுகின்றது.
இந்நிலைமையைக் கவனத்தில்கொண்டு, தமது பிரதேசத்திலும் சிகிச்சை நிலையங்கள் அமைக்கக் கூடிய வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்ததாக கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதன்படி, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் விருந்தினர் விடுதி என்பவற்றை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிபாரிசை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முன்வைக்கவுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago