Kogilavani / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிழக்கு மாகாணத்தில் தற்போது பருவப் பெயர்ச்சி மழை பெய்து வருவதால், டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக கிண்ணியா பிரதேசத்தை 'டெங்கற்ற பிரதேசமாக மாற்றுவோம்' எனும் தொனிப் பொருளில், இந்தப் பிரதேச செயலகத்தால் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்கள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
கிண்ணியா முனைச்சேனை கிராம சேவகர் பிரிவில் பொது மையவாடியில், டெங்கு ஒழிப்பு சிரமதான பணி, இன்று (18) முன்னெடுக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.மொஹமட் கனி தலைமையில் நடைபெற்ற சிரமதானப் பணியில், சமூர்த்தி பயனாளிகள், இளைஞர்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.




33 minute ago
57 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
57 minute ago
3 hours ago