Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
நல்லிணக்கப்பொறிமுறையை மற்றும் நிலைமாறுகால நீதியை நடைமுறைப் படுத்துவதில் அரசினால் இதுவரை எடுக்கப்பட்ட வழிவகைகள் மற்றும் செயற்பாடுகள் சம்பந்தமாக பிரதேச ஊடகவியலாளர்களுக்கு விழிப்பூட்டும் ஒரு நாள் செயலமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
பிரதமரின்கீழ், இயங்கும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப் பதற்கான செயலகத்தினால் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த செயலமர்வு திருகோணமலை உப்புவெளி அமரத்னபே ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இந்த செயலமர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் போது நாட்டில் நல்லிணக்கப் பொறிமுறைக்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கின்ற செயற்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் செய்ய வேண்டிய வகிபாகம் குறித்தும் இந்த செயலமர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது -
இதில் கலந்து கொள்ளவுள்ள ஊடகவியலாளர்கள் தங்களது வரவினை வார நாட்களில் 0112338606 என்ற இலக்கத்தினூடாக தொடர்பாடல் பிரிவின் பிரமீளா தர்மசிறி என்பவரைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளளப்பட்டுள்ளனர். .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .