2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண பொங்கல் விழா

Editorial   / 2019 பெப்ரவரி 09 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாணக் கிளையும், திருகோணமலை மாவட்ட சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண பொங்கல் விழா திருகோணமலை சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் இன்று  (09) சனிக்கிழமை (தை26) வெகு விமர்சையாக  நடைபெற்றது.

இப் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, திருகோணமலை மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ன சிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிலம்பாட்டம், காளை அலங்கரித்தல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X