Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக் குளப் பகுதியில் 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் இன்று(17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
குச்சவெளி வடலிக்குளப் பகுதியைச் சேர்ந்த முஹம்மது சரீப் பாமில் வயது(57) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த குச்சவெளி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
16 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
1 hours ago