Princiya Dixci / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேசத்தில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வழங்கப்படும் குழாய் நீர் சீரின்மையாகக் காணப்படுவதால், பாரிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுப்பதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மழை கால நிலமைகளின் போதும் குழாய் நீர் சீராக வருவதில்லை எனவும் இரு நாட்களுக்கு ஒரு தடவையே நீர் விநியோகிக்கப்படடுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய கொரோனா வைரஸ் பாரவல் காலப்பகுதியில் அடிக்கடி கைகளைக் கழுவுதல் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஒரு மாத காலமாக இவ்வாறான குழாய் நீர் பிரச்சினை காணப்படுவதாகவும் தெரிவிக்கும் மக்கள், இது தொடர்பில் சீரான குழாய் நீர் விநியோக நடவடிக்கையை வழங்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago